பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2024 - துலாம்

பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2024 - துலாம்

விரும்பிய வாழ்க்கைக்கு தேவையான விடயத்தை செயல்படுத்தும் துலாம் ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை இருப்பதும், ராசிநாதன் முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கியஸ்தானத்தை பார்வை இடுவதும், உங்களின் தனி திறமைகளை செயல்படுத்தி மேன்மை அடைவீர்கள். விளையாட்டு துறையில் போட்டிகளில் பங்குபற்றி வெல்வீர்கள். முதலீடு இல்லாத தொழிலில் ஆதாயம் கிட்டும். குறித்த காலத்தில் உங்களின் காரியங்களில் தடையின்றி முடித்து விடுவீர்கள். பொது வாழ்வில் உங்களின் வளர்ச்சி.. சிறப்பானதாக இருக்கும். அரசியலில் உங்களின் செல்வாக்கு உயரும். நினைத்தபடி காரியத்தை வெற்றி கரமாக செய்து முடிப்பீர்கள். பஞ்சமாதிபதி சனி உங்களின் தனஸ்தானத்தை பார்ப்பது தேவைகளுக்கு ஏற்ப பண உதவிகளை பெற்று தரும். எதிர்காலம் சிறப்பான முன்னேற்றம் தரும். கலைதுறையினரின் கலை நிகழ்ச்சி சிறப்பாக அமையும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
16-02-2024 வெள்ளி 08.27 இரவு முதல் 18-02-2024 ஞாயிறு இரவு 02.06 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-

சித்திரை 3, 4 ஆம் பாதங்கள்:
 
சிக்கமான பிரச்சனைகளை கூட எளிதில் தீர்த்து வைப்பீர்கள். காலத்திற்கு தகுந்தபடி உங்களின் செயல்பாடுகளை அமைத்துக் கொள்வீர்கள்.
 
சுவாதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். சிலருக்கு வெளிநாடு பயணம் சென்று வரும் நல்ல வாய்ப்புகள் அமையும். பொருளாதாரம் சிறக்கும்.
 
விசாகம் 1, 2, 3 ஆம் பாதங்கள்:
 
திருமண காரியங்கள் சிறப்பாக அமையும். தொழிலில் நல்ல வருமானமும், முன்பைவிட வளர்ச்சியும் அமையும். உடல் நலனின் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
வெண்மை, மஞ்சள், நீலம்.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
வெள்ளி, சனி, திங்கள்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய் கிழமை முருகனையும் சனி கிழமை ஆஞ்நேயர் வழிபாடும் தொடர்ந்து மேற்கொண்டு வர... உங்களின் சகல காரியமும் வெற்றியைத் தரும்.